கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு பேருந்து ஓட்டுநர்கள், போக்குவரத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உளுந்தூர்பேட்டை நகரத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், வாகனங்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று குறுகலான சாலையில் வளைந்து செல்லும்படி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு பேருந்து ஓட்டுநர்கள், போக்குவரத்து மாற்றத்தை திரும்ப பெற வேண்டும் என கூறினர்.