தாளவாடி அருகே தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து செல்வதால், மலை கிராமங்கள் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், தாளவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான சிக்கள்ளி, இக்கலூர், நெய்தாலபுரம், தலமலை உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சிக்கள்ளி வனப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து செல்கிறது. இதனால், வாகனங்கள் செல்ல முடியாமல் மலை கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.