மதுரை மாவட்டம் மேலூர் அருகே மழை வேண்டி நடைபெற்ற பாரம்பரிய திருவிழாவில் திரளான பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் வழிபட்டனர். சூரக்குண்டு கிராமத்தில் உள்ள சின்னடக்கி, பெரியடக்கி மற்றும் ஆண்டியரசன் மகன் கோவிலில் மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் பாரம்பரிய திருவிழா நடைபெற்றது.