கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே நடைபெற்ற எருதாட்ட விழாவில் சீறிப்பாய்ந்த காளைகளை ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர். துர்கம் கிராமத்தில் உள்ள மல்லிகார்ஜூன சுவாமி கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய எருதாட்ட விழா நடைபெற்றது. இதில் வண்ண வண்ண தோரணங்கள், பலூன்கள், கட்சி கொடிகள் ஆகியவற்றை கொண்டு அலங்கரிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதனை தமிழ்நாடு மற்றும் கர்நாடகா பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.