கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே தேங்காய் ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதன் மீது அமர்ந்து பயணித்த 5 பெண்கள் காயமடைந்தனர். போச்சம்பள்ளி அடுத்த தாதம்பட்டி அருகே மாவத்தூர் பிரிவு சாலையில் வந்த போது, திடீரென டயர் கழன்று உருண்டு ஓடியதால் டிராக்டர் கவிழ்ந்தது. தேங்காய் மீது அமர்ந்து பயணித்த செங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஐந்திற்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தப்பி ஓடிய டிராக்டர் ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.இதையும் படியுங்கள் : தொண்டையில் மாத்திரை சிக்கி 4 வயது ஆண் குழந்தை பலி காய்ச்சலுக்கு மாத்திரை கொடுத்த போது நேர்ந்த சோகம்