விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உரிய அனுமதியின்றி ஏரியில் மண் அள்ளிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவ்வையார் குப்பம் ஏரியில் அனுமதியின்றி ஜேசிபி வாகனத்தை கொண்டு மண் அள்ளிக்கொண்டிருந்த ஆனந்த், முரளி, ஜெயபால் மற்றும் சரவனணை பிடித்த போலீசார், மண் அள்ள பயன்படுத்திய ஜேசிபி மற்றும் டிராக்டர்களை பறிமுதல் செய்தனர்.