ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 15 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தனியார் சிட்பண்ட்ஸ் நிறுவனம் திடீரென மூடப்பட்டதால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சத்தியமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு டி.ஆர். கார்த்திக் என்ற சிட்பண்ட்ஸ் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதில், 5 லட்சம் முதல் 50 லட்சம் வரை 100க்கும் மேற்பட்டோர் சீட்டு போட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சிட்பண்ட்ஸ் நிறுவனம் மூடப்பட்டு கிடப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக போலீஸாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி பாதிக்கப்பட்ட பெண்கள் உள்ளிட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.