சென்னை திருமுல்லைவாயலில் பொதுமக்களுக்கு உணவு வழங்கிய தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளிடம், தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகி ஒருவர் தகாத வார்த்தைகள் பேசி பேனரை வீசி எறிந்து தகராறில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது.திருவள்ளூர் மத்திய மாவட்ட தவெக மாவட்ட செயலாளர் மணிகண்டன் என்பவர் திருமுல்லைவாயலில் பொதுமக்களுக்கு காலை மற்றும் மதிய உணவு வழங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு வந்த தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் நாகராஜ், பெண்களை தகாத வார்த்தை பேசியதால் கைகலப்பு ஏற்பட்டதையடுத்து, அங்கிருந்த போக்குவரத்து காவலர் அதனை தடுத்து நிறுத்தினார்.