கொடைக்கானலில் மழைக்குப்பின் ரம்மியமாக காட்சியளித்த பசுமையான மலைமுகடுகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்,கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதும் அடர்ந்த பனிமூட்டத்துடன் கூடிய லேசான சாரல் மழை விட்டு விட்டு பெய்தது.இதனையடுத்து நகரின் முக்கிய சுற்றுலா இடமான கோக்கர்ஸ் வாக் பகுதியிலிருந்து எதிரே உள்ள பசுமையான மலை முகடுகளுக்கிடையே கடல் அலையைபோல வென்மேகமூட்டங்கள் ஆங்காங்கே கொட்டி கிடக்கும் ரம்மியமான காட்சி கண்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் உள்ளதால் இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.