நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் காட்டு யானையை சுற்றுலாப் பயணிகள் இடையூறு செய்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. தொரப்பள்ளியில் இருந்து முதுமலை வழியாக மைசூர் செல்லக்கூடிய சாலையின் ஓரத்தில் ஒரு காட்டு யானை மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த நிலையில், காரில் வந்த சுற்றுலா பயணிகள் வீடியோ எடுத்த போது ஆக்ரோஷமாக துரத்த முயன்றது.