விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திடீர் காற்றாற்று வெள்ளத்தில் சிக்கிய 150-க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர். தீபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி, ராக்காச்சி அம்மன் கோயில் மற்றும் அருவி பகுதிக்கு சுற்றுலாப்பயணிகள் சென்றிருந்த நிலையில், திடீரென பெய்த கனமழையால் அங்குள்ள ஓடையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.