கொடைக்கானலில் வார விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். நகரின் மையப் பகுதியில் இருக்கும் நட்சத்திர வடிவிலான ஏரியில் படகு சவாரி, ஏரிச்சாலையில் குதிரைசவாரி மற்றும் சைக்கிள் சவாரி செய்த சுற்றுலாப் பயணிகள், புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக் கொண்டனர்.