சபரி மலை சீசன் மற்றும் வார விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிகாலையிலேயே கன்னியாகுமரிக்கு வருகை தந்திருந்த ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் பகவதி அம்மன் கோவில் கிழக்கு வாசல், சன்ரைஸ் பாயின்ட், முக்கடல் சங்கமம் படித்துறை பகுதிகளில் இருந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.