கோடை விடுமுறையை ஒட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகளால் படகு இல்லத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. காலை முதலே இயற்கை சூழலையும், இயற்கை காட்சிகளையும் ரசித்து கண்டு களித்த மக்கள் சுமார் மூன்று மணி நேரம் காத்திருந்து படகு சவாரி செய்து உற்சாகமடைந்தனர். மேலும் அண்ணா பூங்கா, ரோஜா பூங்கா போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.