விடுமுறை தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் கொடிவேரி அணை பகுதியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பகுதிகள் வருகை புரிந்தனர். கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பதாலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதாலும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருகை புரிந்தனர். அருவி பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போதிய எண்ணிக்கையில் காவல்துறையினர் இல்லாததால், மக்கள் குளித்து விட்டு செல்ல இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காலதாமதம் ஏற்பட்டது.