பள்ளிகளில் காலாண்டு விடுமுறை மற்றும் வாரவிடுமுறையை யொட்டி கன்னியாகுமரி SUN RISE VIEW POINT-ல் குவிந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் 2 மணி நேரம் காத்திருந்து சூரியன் உதிக்கும் அழகை கண்டு பிரவசமடைந்தனர். குமரி கடல் பகுதியில் மேகம் மூட்டம் இல்லாததால் கடலில் இருந்து சூரியனின் செந்நிற கதிர் வீச்சுகள் மெல்ல மெல்ல மேலெழும்பி பரவிய கண் கொள்ளா காட்சியை கண்டு ரசித்த மக்கள் அதனை தங்கள் செல்போன்களிலும் பதிவு செய்துக்கொண்டனர். தொடர்ந்து கடலில் குளித்தும்,அலைகளோடு விளையாடியும் சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.