குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில், சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தொடர் விடுமுறையால், சுற்றுலா தலங்களில் குடும்பம் குடும்பமாக மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் இன்று காலை முதலே சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தண்ணீர் அதிகமாக கொட்டும் இரண்டு பகுதிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டு தடுப்பு வேலி அமைத்து கண்காணித்து வருகின்றனர். தண்ணீர் சீராக வரும் பகுதிகளில், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இந்த இடத்தில் இயற்கை அழகை ரசித்து நீண்ட நேரம் குளித்து, சுற்றுலா பயணிகள் மகிழ்ந்து செல்கின்றனர். இதனால், இந்த பகுதி வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.