கோடை விடுமுறை மற்றும் ஞாயிறு விடுமுறை காரணமாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணை பகுதியில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. அதிக வெப்பம் காரணமாக நீண்ட நேரம் காவிரியில் நீராடி மகிழ்ந்த சுற்றுலா பயணிகள், மேட்டூர் அணை பூங்காவில் உள்ள பாம்பு, முயல் பண்ணையை கண்டு களித்தனர். சிறுவர்களும், சிறுமிகளும் பூங்காவில் உள்ள ஊஞ்சல், ராட்டினம் உள்ளிட்டவற்றில் விளையாடி மகிழ்ந்தனர்.