கன்னியாகுமரியில் வார விடுமுறையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குமரி கடலில் அதிகாலையில் சூரிய உதயத்தை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள், கடல் அலைகளில் விளையாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து பகவதி அம்மன் கோவிலிலும் சாமி தரிசனம் செய்தனர்.