சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்காவில் கழிவறை வசதி இல்லை என சுற்றுலா பயணிகள் புகார் தெரிவித்தனர். சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் அண்ணா பூங்காவில் பெரியவர்களுக்கு 40 ரூபாய், சிறியவர்களுக்கு 20 ரூபாய் வசூலிக்கும் நிலையில் குடிநீர் இல்லை எனவும் சுற்றுலா பயணிகள் குற்றஞ்சாட்டினர். மேலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறையினர் பூங்காவில் கழிவறை அமைத்து முறையாக பராமரிக்கவும், குடிநீர் வசதியை ஏற்படுத்தி தரவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.