திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொடர் விடுமுறையை ஒட்டி குவிந்த சுற்றுலா பயணிகள் போதிய பேருந்துகள் இல்லாததால் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பண்டிகை மற்றும் அரையாண்டு விடுமுறை காரணமாக கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இந்நிலையில் கொடைக்கானலில் இருந்து சொந்த ஊர் திரும்புவதற்கு போதிய பேருந்துகள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் 2 மணிநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கூடுதலாக பேருந்துகள் இயக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.