தொடர் விடுமுறையை கழிக்க கோயம்புத்தூர் ஆழியார் அணை, வால்பாறை போன்ற சுற்றுலா தலங்களை காண சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரும் நிலையில், ஆழியார் சோதனைசாவடியில் நுழைவுச் சீட்டு வாங்குவதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் வந்த இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேல் அணிவகுத்து நின்றன.