சபரிமலை சீசன் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதலே திரிவேணி சங்கமம் படித்துறை, சன்செட் பாயிண்ட் உள்ளிட்ட பகுதிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள் கடலில் சூரியன் உதிக்கும் காட்சியை கண்டு ரசித்தனர்.