தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வார விடுமுறை தினத்தையொட்டி குவிந்த சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். குற்றாலத்தில் சீசன் முடிவடைந்தாலும், மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் சீராக தண்ணீர் கொட்டி வருகிறது. இந்நிலையில் வார விடுமுறை தினத்தை ஒட்டி சுற்றுலா பயணிகள் கொளுத்தும் வெயிலிலும் மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.