பண்டிகை கால தொடர் விடுமுறையையொட்டி, தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த சாரல் மழை காரணமாக சீசன் முடிந்தும், மெயின் அருவி, பழைய அருவி, ஐந்தருவி உள்ளிட்ட குற்றால அருவிகளில் தண்ணீர் சீராக கொட்டி வருகிறது. இந்நிலையில் தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் குவிந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.