தீபாவளி பண்டிகை உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஏற்காட்டில் குளுமையான சூழலும் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக பல்வேறு இடங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.