ஓணம் பண்டிகை மற்றும் மிலாடி நபி தொடர் விடுமுறையை முன்னிட்டு, நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. உணவு மாடத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யானைகளை கண்டு களித்த சுற்றுலா பயணிகள், அவை தங்களுக்கு வழங்கப்பட்ட உணவை ருசித்து மகிழ்ந்ததையும் பார்த்து ரசித்தனர். குறிப்பாக தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் பொம்மி, ரகு யானைகளை பார்த்து ரசித்த சுற்றுலா பயணிகள், புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.இதையும் படியுங்கள் :தெருநாய் துரத்திய அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி கடைக்கு வந்தவர்களை கடிக்க முயன்ற தெரு நாய்