ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணைக்கு சுற்றுலாப்பயணிகள் எடுத்து சென்ற மதுப்பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்து கீழே ஊற்றி அழித்தனர். வார விடுமுறையையொட்டி அணைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளை போலீஸார் சோதனை செய்ததில், சிலர் மதுப்பாட்டில்களை தங்களது உடைமைகளில் மறைத்து வைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.