கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, பெரியார் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இரவு நேரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கோமுகி அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும், கல்வராயன் மலை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பெரியார் நீர்வீழ்ச்சியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.