தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். காலை முதலே பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தந்து முதலைப் பண்ணை, பறவைகள் பூங்கா உள்ளிட்டவைகளை கண்டு ரசித்தனர். பின்னர் அருவியில் ஆனந்த குளியலிட்டு பரிசல் சவாரி செய்தும், மகிழ்ந்தனர்.