ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் 16 நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த மாதம் பெய்த பருவ மழையால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி, பவானி ஆற்றில் கலந்து, கொடிவேரி அணையில் விநாடிக்கு ஐந்தாயிரம் கன அடி முதல் 10 ஆயிரம் கன அடி வரை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.