நீலகிரியில் கனமழை காரணமாக 5 நாட்களாக மூடப்பட்ட சுற்றுலாதலங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி வனத்துறை, சுற்றுலாத்துறை உள்ளிட்ட துறைகளின் கீழ் இருந்த சுற்றுலாதலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது. தற்போது இதமான காலநிலை நிலவுவதால், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள லேம்ஸ்ராக்டால்ஃபின் நோஸ்கேத்தரின் அருவி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டது. மேலும், 8 th மைல் பைன் பாரஸ்ட், 9th மைல் சூட்டிங் ஸ்பாட், கேரன்ஹில் ஆகிய இடங்கள் பராமரிப்பு பணி காரணமாக தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது.