கேரளாவிலிருந்து சுற்றுலா வந்த பயணிகளின் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நீலகிரி மாவட்டம் பாடந்துறையில் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த 17 பேரை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் அதிவேகமாக பேருந்தை இயக்கியதே விபத்துக்கான காரணம் என கூறப்படுகிறது.