கன்னியாகுமரில் சுற்றுலா படகுகளில் பயணம் செய்வதற்கான டிக்கெட் கட்டணம் வியாழக்கிழமை முதல் உயர்த்தப்படுவதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி சாதாரண கட்டணம் 75 ரூபாயில் இருந்து 100 ரூபாயாகவும், மாணவர்களுக்கு 30 ரூபாயிலிருந்து 40 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. சிறப்பு கட்டணம் 300 ரூபாயில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது. திடீர் கட்டண உயர்வால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.