சேலம்... தினமும் இரவு நேரங்களில் வீடியோ கால். முன்னாள் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியர்கள். வாட்ஸ்அப்பில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பி டார்ச்சர். பல மாதங்களாக நரக வேதனையை அனுபவித்து வந்த மாணவி. வக்கிர புத்தி கொண்ட 2 ஆசிரியர்கள் சிக்கியது எப்படி? நடந்தது என்ன? சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கையில லெட்டரோட, ஃபர்ஸ்ட் இயர் படிக்குற மாணவி, தன்னோட தாய்கூட வந்துருக்காங்க. அங்க இருந்த அதிகாரிகள் அவங்ககிட்ட இருந்த லெட்டர வாங்கி படிச்சிருக்காங்க. அதுல, பிரைவேட் ஸ்கூல்ல வேலை பாக்குற ஆசிரியர்கள் ரெண்டு பேரு தனக்கு பாலியல் ரீதியா தொல்லை கொடுத்துட்டு இருக்குறதாவும், இது சம்பந்தமா பள்ளி நிர்வாகத்துல கம்ப்ளைண்ட் பண்ணாலும் அவங்க நடவடிக்கை எடுக்குறதில்லன்னும் அழுதபடி சொல்லிருக்காங்க. சேலம், வாழப்பாடில உள்ள பேளூர் பகுதியில ஒரு பிரைவேட் ஸ்கூல் இயங்கிட்டு இருக்கு. ப்ரீ கேஜில இருந்து +2 வரைக்கும் இயங்கிட்டு இருக்க இந்த ஸ்கூல்ல கிட்டத்தட்ட ஆயிரத்து 500 மாணவ, மாணவிகள் படிச்சிட்டு வர்றாங்க. இதே ஸ்கூல்ல படிப்ப முடிச்ச ஒரு மாணவி, இப்ப ஃபர்ஸ்ட் இயர் காலேஜ் படிச்சிட்டு இருக்காங்க. இந்த சூழல, ஸ்கூல ஆசிரியரா இருக்குற ஜெகதீசன், தினகரன்-ங்குற 2 பேரும் அந்த மாணவியோட செல்போன் நம்பர தெரிஞ்சிக்கிட்டு, அவங்கள பாலியல் ரீதியா துன்புறுத்திட்டு இருந்துருக்காங்க. இரவு நேரத்துல மாணவிய வீடியோ கால்ல வரச்சொல்லி மிரட்டிருக்காங்க. என்ன பன்றது, யார்கிட்ட சொல்றதுன்னு தெரியாமலும், வெளிய சொன்னா நம்மல எதாச்சும் நினைச்சிடுவாங்களோ-ங்குற பயத்துலயும் தனக்கு நேர்ந்த கொடுமைய பத்தி யார்கிட்டயும் வாய் திறக்காம இருந்துருக்காங்க அந்த மாணவி. ஆனா, நாளாக நாளாக ஜெகதீசன், தினகரனோட அடாவடித்தனம் எல்லைமீறி போயிருக்குது. மாணவிக்கு கால் பண்ண ஜெகதீசனும், தினகரனும் நைட் வீடியோ கால் பண்ணேன் ஏன் எடுக்கலன்னு கேட்டு, மிரட்டும் தொனில பேசி, தொடர்ந்து டார்ச்சர் கொடுத்துட்டே இருந்துருக்காங்க. அதுமட்டுமில்லாம, வாட்ஸ் அப்ல ஆபாச மெசெஜ் அனுப்பி பாலியல் ரீதியா துன்புறுத்திருக்காங்க. ஒருகட்டத்துல, என்ன பண்றதுன்னு தெரியாம தவிச்ச மாணவி, இந்த விஷயத்த தன்னோட அம்மாக்கிட்ட சொல்லிருக்காங்க. மகள் சொன்னத கேட்டு அதிர்ச்சியடைஞ்ச தாய், நேரா ஸ்கூல் மேனேஜ்மென்ட்ல போய் கம்ப்ளைண்ட் பண்ணிருக்காங்க. அப்ப, என்னமா சொல்றீங்க? உங்க பொண்ணு சொல்ற மாதிரி ஸ்டூடன்ஸ்கிட்ட யாரும் மிஸ்-பிகேவ் பண்ணமாட்டங்கன்னு சொல்லிருக்காங்க. மாணவியோட தாய் சொன்னத கொஞ்சம் கூட காது கொடுத்து கேக்காத ஸ்கூல் மேனேஜ்மென்ட், அவங்கள அங்க இருந்து வெளியேற்றிருக்காங்க. யார்க்கிட்ட சொன்னா தீர்வு கிடைக்கும்ன்னு தவிச்சிட்டு இருந்த தாயும், மகளும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துல போய் புகார் கொடுத்திருக்காங்க.அடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேர்ல, வாழப்பாடி மகளிர் காவல் நிலைய போலீஸ், அந்த ஸ்கூலுக்கு போய், ஆசிரியர்கள் ஜெகதீசன், தினகரனையும் கூப்பிட்டு விசாரணை பண்ணிருக்காங்க. அப்ப, அவரோட செல்போன வாங்கி சோதனை பண்ணப்ப, ராத்திரி நேரத்துல மாணவிக்கு கால், மெசேஜ் பண்ணி டார்ச்சர் பண்ணியிருக்குறது உறுதியாயிருக்குது. விசாரணைக்கு அப்புறம் அவங்க மேல போக்சோ சட்டத்துல வழக்குப்பதிவு செஞ்ச போலீஸ், ஜெகதீசனையும், தினகரனை அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சிருக்காங்க. சமீப நாட்களா ஸ்கூல், காலேஜ்ல ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததா சொல்லப்படுற செய்தி தான் நாலாம்பக்கத்துல இருந்தும் வந்துட்டு இருக்கு. பொம்பள பிள்ளைங்களுக்கு நல்லது, கெட்டது தெரியனும், படிப்புதான் அவங்கள காப்பாத்தும், தைரியம் கொடுக்கும்னு நம்பி, பெத்தவங்க எப்பாடுபட்டாவது பொம்பள பிள்ளைங்கள படிக்க வச்சிட்டு இருக்காங்க. வேலியே பயிரை மேயுறமாதிரி, பெண் பிள்ளைகளுக்கு பாடம் கத்துக் கொடுத்து, பாதுகாக்க வேண்டிய ஆசிரியர்களே, இப்படி அத்துமீறுவது பெற்றோர் மத்தியில அதிர்ச்சிய ஏற்படுத்திருக்குது. இந்த உலகத்துல பெண் பிள்ளைங்களுக்கு எந்த இடம் தான் சேஃப் அப்டிங்குறதுதான் இப்ப எழுந்திருக்குற மிகப்பெரிய கேள்வி.