திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே ஏரியில் டன் கணக்கில் குப்பைகளை கொட்ட முயன்ற டிராக்டர்களை சிறைபிடித்து, விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.