மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கியில் இறந்து மிதந்த மீன்களை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தி கிருமி நாசினி தெளித்தனர்.மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கியில் கடந்த 5 நாட்களாக டன் கணக்கில் மீன்கள் இறந்து கரை ஒதுங்கின. இதனால், தங்கமாபுரிபட்டிணம், சேலம் கேம்ப், அண்ணா நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் துர்நாற்றம் வீசியது. மேலும், நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.