சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி கிலோவிற்கு 10 ரூபாய் குறைந்து மொத்த விலையில் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெரிய வெங்காயம் எந்த மாற்றமில்லாமல் 60 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. வரத்து குறைவு காரணமாக கடந்த சில தினங்களாக தக்காளி மற்றும் பெரிய வெங்காயம் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.