ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே சரக்கு வேன் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தாளவாடியில் இருந்து தக்காளி பாரம் ஏற்றிக் கொண்டு சரக்கு வேன் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது திம்பம் மலைப்பாதை அருகே 7வது கொண்டை ஊசி வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தக்காளிகள் சிதறி சாலையில் கிடந்ததால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.