சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று கிலோ 10 ரூபாய் அதிகரித்து 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி இன்று மொத்த விற்பனையில் கிலோ 50 ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனையானது. நவீன் தக்காளி விலையில் மாற்றம் இல்லாமல் கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மழையால் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.