திருப்பூர் மாவட்டம் உடுமலை தினசரி சந்தையில் தக்காளி விலை கடுமையாக சரிந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு 600 ரூபாய்க்கு விற்பனையான 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி, தற்பொழுது 4 மடங்கு விலை குறைந்து 150 வரை மட்டுமே விற்பனை ஆகிறது. ஒரு கிலோ தக்காளி 6 ரூபாய்க்கும் குறைவாக கொள்முதல் செய்யப்படும் நிலையில், அறுவடை மற்றும் போக்குவரத்து செலவுக்கு கூட கட்டுப்படி ஆகாததால் விரக்தி அடைந்துள்ள விவசாயிகள் தக்காளிகளை சாலையோரங்களிலும், குப்பைகளிலும் கொட்டி வருகின்றனர்.இதையும் படியுங்கள் : 70 சென்ட் இடத்தை மீட்டுத் தருமாறு மூதாட்டி கோரிக்கை மூதாட்டி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி