திருப்பூரில் தக்காளி விலை கடுமையாக சரிந்து, 15 கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்கப்படுவதால், பெரும் நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகளும், வியாபாரிகளும் வேதனை தெரிவித்தனர். இம்மாவட்டத்தில் பல்லடம், பொங்கலூர், கேத்தனூர், உடுமலை, பெருந்தொழுவு உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தக்காளி பெருமளவில் பயிரிடப்பட்டுள்ளது.