சுங்கச்சாவடி ஊழியர்கள் தீபாவளி போனஸ் கோரி, தர்ணாவில் ஈடுபட்ட போது, அவ்வழியே சென்ற வாகனங்கள், கட்டணமின்றி பயணித்தன. புதுக்கோட்டை மாவட்டம், பழைய கந்தர்வகோட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் பணிபுரியும் 25 ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை சுங்கச்சாவடி நிறுவனம் வழங்கவில்லை என்று குற்றம் சாட்டி ஊழியர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவ்வழியாக சென்ற வாகனங்கள், சுங்க கட்டணமின்றி சென்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் மற்றும் சுங்க நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிவித்ததை தொடர்ந்து, ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு, கட்டணம் வசூலிக்கும் பணியை தொடர்ந்தனர்.