வானிலை குறித்த தகவல்களை பகிர TN அலர்ட் என்கிற புது செயலியை அறிமுகப்படுத்தி உள்ளதாக வருவாய்த்துறை செயலாளர் அமுதா IAS தெரிவித்தார்.பேரிடர் காலங்களில் பல்வேறு முகமைகளை ஒருங்கிணைத்து எவ்வாறு செயல்படுவது என்பது குறித்த கருத்தரங்கம் சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வருகிறது.இதன் தொடக்க விழாவில் பேசிய அமுதா ஐ.ஏ.எஸ்., காலநிலை மாற்றத்தால் அதிகமான பேரிடர்கள் ஏற்படுவதாக தெரிவித்தார்.