சென்னை திருவொற்றியூரில் முன்னறிவிப்பு இன்றி மாநகராட்சி அதிகாரிகள் வீட்டிற்கு பூட்டி சீல் வைத்ததாக கண்டித்து, மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். மண்டலம் ஒன்று ஏழாவது வார்டில் மல்லிகா என்பவரின் 30 ஆண்டுகள் பழமையான வீடு அனுமதியின்றி கட்டப்பட்டதாக கூறி சீல் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் 9வது வார்டில் தேசராணி என்பவரின் வீட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஓடு உடைந்து விழுந்ததாக கூறப்படுகிறது. அந்த வீட்டை இடிப்பதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பிய நிலையில், நிவாரணம் வழங்காமல் நோட்டீஸ் வழங்கியதாக கண்டித்து போராட்டம் நடைபெற்றது.