திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் உண்டியலில் கடந்த 35 நாட்களில் ஒரு கோடியே 58 லட்சம் ரூபாயை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி உள்ளனர். மண்டபத்தில் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இப்பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். உண்டியலில் 1 கோடியே 58 லட்சத்து 47 ஆயிரத்து 551 ரூபாய் பணமும், 776 கிராம் தங்கம் மற்றும் 9,870 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.