திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் உணவகத்தை சூறையாடிய இரண்டு பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். போயம்பாளையம் பகுதியில் கடந்த 2ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாட பணம் கேட்டு மிரட்டி, கணபதி என்பவரின் உணவகத்தை சூறையாடியதாக கார்முகிலன், சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதாக இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் லட்சுமி உத்தரவிட்டுள்ளார்.