மதுரை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விடுமுறை தினம் மற்றும் கார்த்திகை மாதத்தை ஒட்டி பக்தர் கூட்டம் அலைமோதியது. அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியை தரிசிக்க மதுரை மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் காலை முதல் வருகை தந்தனர். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலையிட்ட பக்தர்களும் அதிகளவு வருகை தந்ததால் கோவில் வளாகப் பகுதியில் கூட்டம் நிரம்பி வழிந்தது.