விசிக தலைவர் திருமாவளவன் முதலமைச்சர் ஆனால் தமிழகத்திற்கு நன்மை பயக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் தெரிவித்தார். எல்லா அரசியல் கட்சித் தலைவருக்கும் முதல்வராக வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும் என்றவர், முதல்வராக வேண்டுமென ஆசைப்படுவதாக திருமாவளவன் சொன்னதில் தவறில்லை என்று கூறினார்.