திமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையே நிலவும் அதிருப்தியை விசிக தலைவர் திருமாவளவனின் செயல்பாடு காட்டுவதாக தவெக மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்தார். திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், என்ன நடக்கப் போகிறது என்பதற்கு காலம் பதில் சொல்லும் என்று கூறினார். மேலும், தவெக கூட்டணிக்கு விசிக வருகிறதோ இல்லையோ, அக்கட்சி தொண்டர்கள் வந்து கொண்டிருப்பதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.